17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா..

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா..

எழுதியவர்: Askar January 12, 2024, 5:11 pm

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா..

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.இதற்கு திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், திமுக மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன்,பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.1000 ரொக்கம், முந்திரி உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, தாசில்தார் ராமையா, யூனியன் ஆணையாளர்கள் விஜயசந்திரிகா, சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் மேனகா, திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கூட்டுறவு வங்கி, நியாயவிலை கடை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!