17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மேல்பெண்ணாத்தூர் அரசு  பள்ளியில் பொங்கல் திருவிழா..

மேல்பெண்ணாத்தூர் அரசு  பள்ளியில் பொங்கல் திருவிழா..

எழுதியவர்: ஆசிரியர் January 12, 2024, 3:31 pm

தி.மலை அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா ஜெயந்தி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பிரகாஷ் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு முன்னிலை வகித்தனர்  இதில் பாரத சாரணர் இயக்கம் இளம் செஞ்சிலுவை சங்கம் தேசிய பசுமை படை அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பாக வண்ண கோலம்மிட்டு செங்கரும்பு மஞ்சள் வைத்து மாவிலை தோரணமிட்டு புது பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கொண்டாடினார்கள். மற்றும் பள்ளியில் இந்த ஆண்டு நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும்  திறனாய்வு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெறுவோம் என்றும் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்ப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  பள்ளியின் ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, நாராயணன், அரசு ,மகேஸ்வரி, ஆறுமுகம். ராஜாராம், சாந்தி, சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!