18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சி.எஸ்.ஐ பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா..

சி.எஸ்.ஐ பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 12, 2024, 3:28 pm

கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் தலைவர் கபீர் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர் திரு.பெஞ்சமின் வசீந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.சங்க செயலாளர் எபன் வரவேற்றார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கீழக்கரை சிஎஸ்ஐ குருசேகர தலைவர் அருட்திரு.டேனியல் சுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் பற்றி சிறப்புரையாற்றினார்.



இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசிக்தீன், டாக்டர் சுந்தரம், உறுப்பினர்கள் மரியதாஸ்,முப்தா , பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.பள்ளி ஆசிரியை திருமதி கேத்ரின் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!