18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் கல்லூரிகளில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உசிலம்பட்டியில் கல்லூரிகளில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

எழுதியவர்: mohan January 12, 2024, 1:16 pm

தமிழகமெங்கும் தைத்திருநாளையொட்டி பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.இவ்விழாவில் கல்லூரி பேராசியர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

உசிலை மோகன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!