17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழிக் கல்வி உதவித் தொகை திட்டத் தேர்வு வழிகாட்டல் -NMMS-வழங்கும் நிகழ்ச்சி…

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழிக் கல்வி உதவித் தொகை திட்டத் தேர்வு வழிகாட்டல் -NMMS-வழங்கும் நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் January 11, 2024, 11:47 pm

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழிக் கல்வி உதவித் தொகை திட்டத் தேர்வு வழிகாட்டல் -NMMS-வழங்கும் நிகழ்ச்சி 11.1.2024 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் தாளாளர் சுஐபு  தலைமை தாங்கினார், ரோட்டரி தலைவர் டாக்டர் கபீர் முன்னிலை வகித்தார், உறுப்பினர். செல்வநாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். நன்றியுரை. சபீக் கூறினார். பொருளாளர்.சுப்பிரமணி , ஜமாத்தார்கள் மற்றும் ஆசிரியர் பொறுப்பாளர்களுடன் 8ஆம் வகுப்பில் பயிலும் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயணடைந்தனர்.

இதை டிரெய்னர் மோகன் எளிமையாகவும், தெளிவாகவும் மாணாக்கர்களுக்கு புரியும் வகையிலும் தொகுத்து வழங்கி புரியவைத்தார். இத்தேர்வில் கீழக்கரையளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு பொற்கிழி வழங்குவதாக டாக்டர்.கபீர் கூறி மாணாக்கர்களுக்கு உத்வேகம் அளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!