18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், மதுரையில் ஆர்ப்பாட்டம்:

டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், மதுரையில் ஆர்ப்பாட்டம்:

எழுதியவர்: Askar January 11, 2024, 11:07 pm

டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் மதுரையில் ஆர்ப்பாட்டம்:

4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மதுரை மண்டல சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . நீண்ட காலமாக தற்காலிகபணி நீக்கம், கிடங்கு பணி மாவட்ட பணியிட மாற்றம் பெற்ற பணியாளருக்கு உடனடியாக கலந்தாய்வு மூலம் பணி வழங்கப்பட வேண்டும், பணி நிரவலில் உள்ள குறைபாடுகளை களைத்திட வேண்டும், ஏபிசி சுழற்சிமுறை பணியிட மாற்ற கொள்கையை அமுல்படுத் திடவேண்டும், தமிழகத்தில் சில பிரச்சனைகள் தொடர்பாக 10 க்கும் மேற்பட்ட சில்லரை மதுபான கடைகள் மூடப்பட்ட கடை பணியாளர்களை கலந்தாயில் சேர்க்காமல், உடனடியாக கடைப் பணி வழங்கிட வேண்டும் ஆகிய 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மதுரை மண்டலம் சார்பில் அம்பிகா தியேட்டர் முன்பு அதன் மாநில துணைத் தலைவர் மரகதலிங்கம், தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் , தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமிநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டச் சேர்ந்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பேரூராட்சி பணியாளர் சங்க நிர்வாகி இரா. பிச்சைமுத்து, கண்டன கோஷங்கங்களை முழங்கினார்.செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!