17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாமில் 98 மாணவர்கள் தேர்வு,

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாமில் 98 மாணவர்கள் தேர்வு,

எழுதியவர்: ஆசிரியர் February 18, 2018, 12:03 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இறுதியாண்டு டிப்ளமா பயிலும் இயந்தரவியல் துறை, மின்னணுவியல் மற்றும் கணினித்துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. அலாவூதின் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர், சேக்தாவூத் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். அதை தொடர்ந்து மின்னணுவியல் துறை விரிவுரையாளர் மரியதாஸ் அனைவரையும் வரவேற்றுபேசினார்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னை அவலான் டெக்னாலஜி என்ற பன்னாட்டு நிறுவனம் மாணவர்களை பணிக்காக தேர்வு செய்தனர். இந்த முகாமில் சென்னை அவலான் டெக்னாலஜி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுதுறை குழுவினர் முதுநிலை அதிகாரி. விஜயபாண்டியன் மற்றும் டெக்னிக்கல் பொறியாளர், வெங்கடேஸ்வரன் ஆ‌கியோ‌ர் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த வளாக நேர்முக தேர்வினை நடத்தினார்கள்.

இந்த நேர்முக தேர்வில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் இறுதியாண்டு பயிலும் இயந்தரவியல் துறையில் 46 மாணவர்களுக்கும், மின்னணுவியல் துறை சார்ந்த 42 மாணவர்களும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியியல் துறை சார்ந்த 9 மாணவர்களும் மற்றும் கணினித்துறையில் 1 மாணவர் மொத்தம் 98 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுவரை நடைபெற்ற வளாக தேர்வுகள் மூலம் 395 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயந்தரவியல் துறை மற்றும் மின்னனியல் மற்றும் மின்னணுவியல் மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியியல் துறை மற்றும் கணினித்துறை மாணவர்கள் 100 % வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

வளாக தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் துணை முதல்வர் சேக்தாவூத் மற்றும் இயந்தரவியல் துறை தலைவர் கணேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் ஆ‌கியோ‌ர்கள் செய்திருந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் பயிலும் அணைத்து மாணவர்களுக்கும் 100% வேலைவாய்ப்பு அளிக்கும் விதத்தில் உழைக்கும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. அலாவூதின், வேலைவாய்ப்பு ஒருங்கனைப்பாளர் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் சேக்தாவூத் ஆகியோருக்கு கீழை நியூஸ் இனணயதள செய்தியின் மூலம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!