இராமநாதபுரம், ஜன.10 -இராமநாதபுரம் நகராட்சி 8வது வார்டு ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகுப்பை கலெக்டர் விஷ்ணு சந்திரன், முருகேசன் எம்எல்ஏ ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், நகராட்சி தலைவர் கார்மேகம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் தமீம் ராஜா, தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம், பொதுவிநியோகத்திட்ட துணை பதிவாளர் கோவிந்தராஜன், நகராட்சி துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏர்வாடி இரண்டாம் எண் ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை திமுக அவைத் தலைவர் வில்லியம் சார்லஸ் துவக்கி வைத்தார். மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, முன்னாள் கவுன்சிலர் காதர் பாட்ஷா, திமுக கிளைச் செயலர் ஆசிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்: கலெக்டர் துவக்கி வைத்தார்..
எழுதியவர்: ஆசிரியர் January 10, 2024, 9:47 pm




You must be logged in to post a comment.