17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி.. வீடியோ செய்தி..

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி.. வீடியோ செய்தி..

எழுதியவர்: ஆசிரியர் January 10, 2024, 9:39 pm

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (10.01.2024) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில்  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காந்தி முன்னிலையில் கொடியசைத்து தூங்கி வைத்தனர். இப்பேரணியில் மாவட்ட காவல்துறை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் வகையிலும் ராமநாதபுரம் நகர் முழுவதும் அணிவகுப்போடு பேரணியாக வலம் வந்தனர்.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் ஆயுதப்படை ஆய்வாளர் சிவா ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள் சுனில் குமார் , தாசன் , ராஜு , துரை ,ராதா கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!