17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..

செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: syed abdulla January 10, 2024, 5:06 pm

செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாவது நாளாக போக்குவரத்து கழக பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனையில்ஏ ஐ டி யு சிஅண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து பணியாளர்கள் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்,ஓய்வூதியர்களுக்கு 96 மாதங்களாக வழங்காமல் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ,வி. காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!