18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் மூன்று சங்கங்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம்

ராமநாதபுரத்தில் மூன்று சங்கங்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம்

எழுதியவர்: Baker BAker January 10, 2024, 4:57 pm

ராமநாதபுரம் எல்ஐசி அலுவலகம் முன்பாக காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் முதல் நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் இணைந்து கிளை செயலாளர் பிரதாப் தலைமை இன்று ஒரு மணி நேர வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை எல்ஐசி நிர்வாகம் உடனே துவங்க வேண்டும், எல்.ஐ.சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. முதல் நிலை அதிகாரிகள் சங்கம் சார்பாக ஈஸ்வரன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பாக விக்னேஷ் காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளை தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் வேலை நிறுத்தத்தை பற்றி விளக்கிப் பேசினார். கிளை பொறுப்பாளர் ராஜேஷ் செல்வகுமார் நன்றி கூறினார். இந்த ஒரு மணி நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் வெளியேறி போராட்டம் நடத்தியதால் அலுவலகம் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!