18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனியில் ஒளிப்பட கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது..

பழனியில் ஒளிப்பட கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது..

எழுதியவர்: Askar January 10, 2024, 4:59 pm

பழனியில் ஒளிப்பட கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது..

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டார ஒளிப்படக் கலை தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா பழனி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் சீனிவாசன், செயலாளர் நாகமாணிக்கம், மற்றும் பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன்,ராஜேந்திரன், வீரமணி , மற்றும் பொறுப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இந்நிகழ்வில் புகைப்படம் மற்றும் ஒளிப்படத்திற்கான விலைப்பட்டியல் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதனிடையே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை , பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் , மற்றும் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான தினசரி நாள்காட்டி வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

முன்னதாக இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒளிப்பட கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பழநி -ரியாஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!