மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேச்சி அம்மன் கோவில்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஊருக்கு போதுமான சாலை வசதி, அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பேச்சி அம்மன் கோவில் பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு குள்ளானது .தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய் வட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மேலும் கிராமத்திற்குள் சென்று வருவாய் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
உசிலம்பட்டி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
எழுதியவர்: mohan January 10, 2024, 12:16 pm




You must be logged in to post a comment.