17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெள்ள நிவாரண நிதி ரூ.12.12 லட்சம் தவ்ஹீத் ஜமாத் ஒப்படைப்பு..

வெள்ள நிவாரண நிதி ரூ.12.12 லட்சம் தவ்ஹீத் ஜமாத் ஒப்படைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 10, 2024, 9:46 am

இராமநாதபுரம், ஜன.10- தமிழகத்தில் கடந்த 2023 டிச.16, 17, 18, 19 தேதிகளில் கனமழை பெய்தது. இதனால், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு)மாவட்டம் சார்பில் நிவாரண நிதி ரூ.12.12 லட்சம் வசூலிக்கப்பட்டது.

இந்நிதியை சிவகங்கையில் நடந்த நிகழ்வின்போது . மாநிலத்தலைவர் சுலைமான், மாநில துணைத்தலைவர் பாருக், மாநில செயலர்கள் காஞ்சி சித்திக், யாசிர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர், மாவட்ட செயலர் தினாஜ்கான், மாவட்ட பொருளாளர் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலர்கள் மீரான், பாருக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!