17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மழையினால் வீடு இழந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை… வீடியோ செய்தி..

மழையினால் வீடு இழந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை… வீடியோ செய்தி..

எழுதியவர்: ஆசிரியர் January 10, 2024, 1:04 am

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பாம்பூர் கிராமத்தில் வசிக்கும் பத்மா என்பவரின் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த நிலையில் கனமழை பெய்ததால் வீட்டின் மேல் கூரை இடிந்து கீழே அருகில் விழுந்ததால் மயிரிழையில் உயிர்த்தப்பினார். உடனே எழுந்து சத்தமிட்டதால் அக்கம் பக்கம் உள்ள மக்கள் முதலுதவி செய்தனர். மேல் கூரை விழுந்ததில் வீட்டில் உள்ள உபயோகப் பொருள் உடைந்த சிதறி கிடந்தன . அதனைத் தொடர்ந்து கனமழை காரணமாக அதிகாரிகளுக்கு பத்திரிக்கையின் வாயிலாக தகவலை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தலையாரி கிராம நிர்வாக அதிகாரிகள் வீட்டை பார்வையிட்டு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆறுதல் கூறினர் மேலும் பத்மா என்பவர் இடிந்த இடத்தை சரி செய்து தர வேண்டும் என்றும் எனக்கு கணவர் இல்லை நான் தனியாகத்தான் இருக்கிறேன் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கிறோம் என்று அதிகாரிகள் சென்று விட்டனர் . இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரித நடவடிக்கை எடுத்து வீட்டில் ஏற்பட்ட பழுதை அரசு சார்பாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!