17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

இராமநாதபுரத்தில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2024, 8:28 pm

இராமநாதபுரம், ஜன.9- வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதை தொடர்ந்து  ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை தொடர்ந்து பெய்தது. ராமநாதபுரம் நகரில் பல் மணி நேரம் நீடித்த கனமழையால், பேருந்து நிலையம், பாரதி நகர், கேணிக்கரை, காய்கறிமார்க்கெட் கறிக்கடை சந்து உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. கறிக்கடை சந்து பகுதியில் தேங்கிய தண்ணீரால் அப்பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதித்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 402.70 மிமீ மழை பெய்தது. சராசரி மழையளவு 25.17 மிமீ ஆகும். தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. பெரும்பாலான பள்ளிகள் மதிய உணவு இடைவெளிக்கு பின் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!