17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம், கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதிகளில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..

மண்டபம், கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதிகளில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2024, 7:29 pm

இராமநாதபுரம், ஜன.9 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி, ராமேஸ்வரம் நகராட்சி, கீழக்கரை நகராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை (10.01.2024) நடைபெறுகிறது. இதன்படி  மண்டபம் பேரூராட்சி வார்டு 1 முதல் 18 வார்டுகளுக்கு மண்டபம் பேரூராட்சி திருமண மஹால்.

ராமேஸ்வரம் நகராட்சி 3, 8, 13,14, 15 வார்டுகளுக்கு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரி.

கீழக்கரை நகராட்சி 2, 4, 5 வார்டுகளுக்கு சுப்ரமணியன் ஜெயலெட்சுமி நாடார் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் அந்தந்த பகுதி பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!