18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கக் கோரி சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு..

கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கக் கோரி சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு..

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2024, 6:00 pm

கடையம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் வராமல் உள்ள 43 மகளிருக்கு உரிமை தொகை வழங்கக் கோரி சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மொத்தமாக மனு அளிக்கப்பட்டது. கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரம், முதலியார்பட்டி, பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, வீராசமுத்திரம், மாலிக் நகர், சம்பன்குளம், மந்தியூர், சிவசைலம், கடையம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி இருந்தும் வராமல் உள்ளதாக கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, தகுதி இருந்தும் வராமல் உள்ள மகளிரிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் மற்றும் மமக மாவட்ட துணைச் செயலாளர் கோதர் மைதீன், பொட்டல்புதூர் ஜாக் அமைப்பின் செயலாளர் சிராஜ், முதலியார்பட்டி வார்டு உறுப்பினர் பாக்யராஜ் உள்ளிட்ட நபர்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு பெறும் நாளில், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. இதில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர், பொட்டல்புதூர் ஜாக் அமைப்பின் செயலாளர் சிராஜ், தமுமுக முதலியார்பட்டி நகரத் தலைவர் காலித், ரவணசமுத்திரம் செய்யது அலி, ஆகியோர் கலந்து கொண்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!