17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இறால் ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை முகாம்..

இறால் ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் January 9, 2024, 2:35 pm

இராமநாதபுரம், ஜன.9- பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் கீழ் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் தொழில் நிறுவன ஊழியர்களுக்கு தொற்றாநோய் பரிசோதனை முகாமை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் காணொலி காட்சி மூலம் இன்று துவங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இறால் ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களுக்கு தொற்றாநோய் இலவச பரிசோதனை முகாம் இன்று நடந்தது. மண்டபம் பேரூராட்சி தலைவர் டி. ராஜா தலைமை வகித்தார். தொற்றா நோய் திட்ட மருத்துவ அலுவலர் ஞான சவுந்தரி முன்னிலை வகித்தார்.  சுகாதாரத்துறை துணை இயக்குநர் (பரமக்குடி) இந்திரா தொடங்கி வைத்தார். ஆண், பெண் உள்பட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை அடிப்படையில் டாக்டர்கள் சுரேந்திரன், கண்மணி ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் ஆலோசனை வழங்கினர். சுகாதாரத்துணை இயக்குநர் அர்ஜூன் குமார் அறிவுறுத்தல் படி மண்டபம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், மண்டபம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முத்துக்குமார் வழிகாட்டல் படி மண்டபம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கரு.மகேந்திரன், மண்டபம் ஆரம்ப சுகாதார நிலைய முதுநிலை சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!