17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகாசியில், அனுமன் சிலை வழிபாடு,14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்…

சிவகாசியில், அனுமன் சிலை வழிபாடு,14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்…

எழுதியவர்: Askar January 9, 2024, 11:08 am

சிவகாசியில், அனுமன் சிலை வழிபாடு, 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெறும் 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிவகாசி சிவன் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஆஞ்சநேயர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்று வருகின்றன. வரும் 11ம் தேதி (வியாழன் கிழமை) அனுமன் ஜெயந்தியன்று, பூஜையில் வைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலை, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏற்றப்பட்டு நான்கு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

செய்தியாளர்,வி.காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!