17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் சிக்கிய மலைப்பாம்பு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..

போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் சிக்கிய மலைப்பாம்பு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..

எழுதியவர்: Askar January 8, 2024, 12:02 pm

போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் சிக்கிய மலைப்பாம்பு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே பூக்கடைகள் அதிகம் உள்ள பகுதியான அப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பிரபல பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபு அவர்களுடன் இணைந்து பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர் சுமார் அரை மணி நேரம் தேடுதலுக்கு பின் சுமார் 6 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது மக்கள் அதிகம் உள்ள பகுதியில் மலைப்பாம்பு கொண்டு சிக்கியது அதை பத்திரமாக மீட்டு வனத்துறை அதிகாரி விஜய ராஜன் பத்திரமாக ஒப்படைத்தனர் பின் அடர்ந்த வனப்பகுதியில் காலையில் கொண்டு விடப்படும் என வனத்துறை அதிகாரி விஜயராஜன் தெரிவித்தார் அதிகம் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து உள்ள பகுதியில் மலை பாம்பு ஒன்று பிடிபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

செய்தியாளர்,வி. காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!