தென்காசி நகராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்; பொதுமக்கள் ஆர்வத்துடன் மனு அளித்தனர்..
தென்காசி நகராட்சி பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மனு அளித்தனர். தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு பகுதியில், வார்டு வாரியாக 7 நாட்கள் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதன் நிறைவு முகாம் 27, 30, 31, 32 ஆகிய வார்டு பகுதிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி நகராட்சி தலைவர் ஆர். சாதிர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, தாசில்தார் சுப்பையா, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர் சண்முகம், மண்டல துணை வட்டாட்சியர் காதர் மைதீன், ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் கண்ணன், முதுநிலை ஆய்வாளர் ஆறுமுகம், நகராட்சி பொறியாளர் ஹசீனா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இம்முகாமில் நகராட்சி துணைத்தலைவர் சுப்பையா, நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன், லெட்சுமண பெருமாள், காதர்மைதீன், சுப்பிரமணியன், சங்கர சுப்பிரமணியன் ஆகியோருடன் தென்காசி நகராட்சி பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். தென்காசி நகராட்சி பகுதியில் இதுவரை நடைபெற்ற 7 முகாம்களிலும் சேர்த்து சுமார் 3026 மனுக்கள் பெறப்பட்டதாகவும், இம்முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், வணிக பெருமக்கள், சமுதாய பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.