17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட பூங்காக்கள்; நகர்மன்ற தலைவர் சாதிர் திறந்து வைத்தார்..

தென்காசியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட பூங்காக்கள்; நகர்மன்ற தலைவர் சாதிர் திறந்து வைத்தார்..

எழுதியவர்: ஆசிரியர் January 6, 2024, 10:03 pm

தென்காசியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட பூங்காக்களை நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர் திறந்து வைத்தார். தென்காசி நகராட்சியில் வீட்டு வசதி வாரிய காலனி எல். பிளாக் பகுதியில் பூங்கா மற்றும் உழவர் சந்தை அருகேயுள்ள பூங்கா ஆகியவை கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா முன்னிலை வகித்தார். தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர் பூங்காக்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளர் ஹசீனா, உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரியா, நகரப் பொருளாளர் ஷேக்பரித், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுமான் சாதத், அரசு வழக்கறிஞர் முருகன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்க பாண்டியன், மாணவரணி மைதீன், சாமுவேல், கனகராஜ், குடியிருப்போர் நல சங்கத்தைச் சார்ந்த சுப்புராஜ், டாக்டர் பிஸ்வாஸ், தாசையா, கோவிந்தன், மற்றும் அரசு ஒப்பந்தக்காரர் நவாஸ்கான், திமுக உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!