18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்; அனைத்து இரத்ததான கூட்டமைப்பினர் பங்கேற்பு..

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்; அனைத்து இரத்ததான கூட்டமைப்பினர் பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 6, 2024, 7:58 pm

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி மாவட்ட அனைத்து இரத்ததான கூட்டமைப்பு இணைந்து தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் 06.01.2024 சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட இணை இயக்குநர் டாக்டர். பிரேமலதா தலைமையில் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ஜெஸ்லின் முன்னிலை வகிக்க அனைத்து இரத்ததான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சீரிய முயற்சியில் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் வழங்கினர்.

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த நிலைய மருத்துவர் பாபு மற்றும் மருத்துவ குழுவினர் இரத்தம் சேகரித்தனர். இதில் உறைவிட மருத்துவர் செல்வபாலா மற்றும் மருத்துவர்கள் கலந்து சிறப்பித்தனர். 25-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூக கொடையாளர்களும் தங்கள் குருதியை தானமாக வழங்கியது இந்த முகாமின் சிறப்பு அம்சமாக அமைந்தது. முகாமில் குருதி கொடையாளர்கள் மற்றும் குருதி தான ஒருங்கிணைப்பாளர்கள் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!