ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பேருந்து நிலையம் தனியார் கல்லூரிகள் போன்ற இடங்களில் உள்ள கடைகளை கீழக்கரை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் எம் ஜெயராஜ் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா சுகாதாரத்துறை சுகாதார ஆய்வாளர் சுரேந்தர், ராம்குமார் கீழக்கரை காவல் நிலைய காவலர் ராம்கி ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர். . ஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து அபராதம் விதித்து மூடப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ரூ 50,000 இருந்து ஒரு லட்சம் வரை அபராத விதிக்கப்படும் என்றும் 30 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரை கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என்றும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கீழக்கரையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு
எழுதியவர்: Baker BAker January 6, 2024, 4:32 pm




You must be logged in to post a comment.