18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » பொங்கல் போனஸ்,வழங்க முதல்வர் ஆணையிட வேண்டும்: பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டுகோள்..

பொங்கல் போனஸ்,வழங்க முதல்வர் ஆணையிட வேண்டும்: பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டுகோள்..

எழுதியவர்: syed abdulla January 6, 2024, 4:33 pm

பொங்கல் போனஸ்,வழங்க முதல்வர் ஆணையிட வேண்டும்: பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டுகோள்..

இது சம்பந்தமாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது,

12 ஆண்டாக பணி புரியும் பகுதிநேர ஆசிரியர்கள் ஒருமுறைகூட பொங்கல் போனஸ் பெறவில்லை.மே மாதம் சம்பளமும் ஒருமுறைகூட பெறவில்லை.2500 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பும் இன்னும் செயல்படுத்தவில்லை.10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் பெற்று பணிபுரிகின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

மனிதாபிமானம் கருதி தமிழக முதல்வர் அவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!