17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுற்றுச்சூழல் கல்வி பயிற்சி பட்டறையில் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு…

சுற்றுச்சூழல் கல்வி பயிற்சி பட்டறையில் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு…

எழுதியவர்: ஆசிரியர் January 6, 2024, 8:55 am

இராமநாதபுரம், ஜன.6 – மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி தொடர்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறை ராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தலைமை வகித்தார்.

இதில் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாசிரியர்கள், மாணவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வியல் குறித்து செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. மஞ்சள் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேவிபட்டினம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதல்வர் தீனதயாளன், முஹமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் ஏற்பாடு செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!