17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடியில் ரூ.67.71 லட்சம் மதிப்பில் போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு…

பரமக்குடியில் ரூ.67.71 லட்சம் மதிப்பில் போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு…

எழுதியவர்: syed abdulla January 6, 2024, 8:10 am

இராமநாதபுரம், ஜன.6 – ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகர் போக்குவரத்து பணியில் 1 இன்ஸ்பெக்டர், 1 எஸ்ஐ., உட்பட 15க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இங்கு புதிய கட்டடம் கட்ட 2019ல் ரூ.67.71 லட்சம்  நிதி ஒதுக்கி பணிகள் நிறைவடைந்தன. போக்குவரத்து காவல் புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

பரமக்குடியில் போக்குவரத்து காவல் பிரிவு சுட்டடத்தை காவல் துறை துணைத் தலை வர் துரை திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ராம நாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, கூடுதல் கண்காணிப்பாளர்கள் காந்தி, அருண், துணை கண்காணிப்பாளர் சபரிநாதன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் சுரேஷ், நகர் காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன்,  தாலுகா காவல் ஆய்வாளர்  காளிராஜன்,  பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் சுதா உள்பட கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!