18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுடுதண்ணீர் இயந்திரங்கள் திறப்பு விழா.

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுடுதண்ணீர் இயந்திரங்கள் திறப்பு விழா.

எழுதியவர்: mohan January 5, 2024, 1:23 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள சுத்திகரிப்பட்ட குடிநீர் மற்றும் சுடுதண்ணீர் இயந்திரங்கள் உபகரணங்கள் திறப்பு விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி அய்யப்பன் எம் எல் ஏ கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுடுதண்ணீர் திறப்பு விழாவில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குநர்  செல்வராஜ் மருத்துவமனை கண்காணிப்பாளர் .மணிவண்ணன் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர்.மாதவன் செவிலியர்கள் கண்காணிப்பாளர் கமலா, டாக்டர்.ஓ. சந்திரன் முன்னிலையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி அய்யப்பன் எம் எல் ஏ தலைமையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள ஆர்ஓ வாட்டர் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் மட்டும் சுடு தண்ணீர் இயந்திரங்கள் உபகரணத்தை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குதிறந்து வைத்தார். விழாவில் மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன் வேலராமமூர்த்தி மாவட்ட நிர்வாகிகள் பிரபு கார்த்திகை சாமி தொகுதி செயலாளர் ராஜா நகரச் செயலாளர் சசிகுமார் ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் அழகுமாரி பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஊழியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உசிலை மோகன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!