17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் வீட்டுக்கு வீடு இலவச காவலர்கள்… ஆழ்ந்த உறக்கத்தில் நகராட்சி…. விழித்திருக்கும் வெறி நாய்கள்…

கீழக்கரையில் வீட்டுக்கு வீடு இலவச காவலர்கள்… ஆழ்ந்த உறக்கத்தில் நகராட்சி…. விழித்திருக்கும் வெறி நாய்கள்…

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2024, 11:39 pm

கீழக்கரை நகராட்சிக்கு வைக்கப்படும் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு நிலையே காரணம்.  ஊர் முழுவதும் தினம், தினம் நாய்களின் எண்ணிக்கை கூடிய வண்ணமே உள்ளது. பொதுமக்களும், சிறுவர்களும் வெளிய பெரும் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. தினம் தோறும் தெருக்களில் பள்ளி செல்லும் சிறார்களை வெறி நாய்கள் துரத்துவது அன்றாட நிகழ்வாகி விட்டது.

கீழக்கரையில் உள்ள பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பல தருணங்களில் வெறி நாய்களை கட்டுப்படுத்த மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதற்கு பெருகி வரும் நாய்களே சாட்சி.  கடந்த வருடங்களில் நாய் கடியால் சிறுவர்கள் இறப்புக்குள்ளானது இப்போதைய நகராட்சி நிர்வாகம் அறியவில்லையா அல்லது அதற்கான தீர்வு காணாமல் தள்ளி செல்வது ஏன் என்பதை நிலமை மோசம் ஆகும் முன்பு தெளிவுபடுத்தினால் நல்லது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!