17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாவூர்சத்திரம் அருகே மின்னொளி கபடி போட்டி; திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டு..

பாவூர்சத்திரம் அருகே மின்னொளி கபடி போட்டி; திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டு..

எழுதியவர்: mohan January 3, 2024, 12:03 pm

பாவூர்சத்திரம் அருகே மின்னொளி கபடி போட்டி நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் மற்றும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பட்டமுடையார் புரத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி 7 கிங்ஸ், பி.எம்.சி. கபடி குழு சார்பில் 16-வது ஆண்டு ஒரு நாள் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மைலப்புரம் அணி முதல் பரிசும், பட்டமுடையார் புரம் அணி 2-வது பரிசும், கீழப்பாவூர் அணி 3-வது பரிசும், திப்பணம்பட்டி அணி 4-வது பரிசும், மாங்குடி அணி 5-வது பரிசும், முருகன் குறிச்சி அணி 6-வது பரிசும், ஐந்தாங்கட்டளை அணி 7-வது பரிசும், பட்டமுடையார் புரம் அணி 8-வது பரிசும் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு திமுக மாவட்ட பிரதிநிதி தங்கபாண்டி தலைமை வகித்தார். குணசேகரன், ஜெகநாதன், முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம். எஸ்.ராஜன் அனைவரையும் வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன், மாநில சுற்றுச் சூழல் அணித்தலைவகும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினர். இந்த விழாவில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் எம்.திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன், மகேஷ் மாயவன், மாவட்ட பிரதிநிதி சீ. பொன் செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே. ரமேஷ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், துணை சேர்மன் கனகராஜ், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி கோமு, செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், கணேசன், மாறன், சரஸ்வதி பாஸ்கரன், ராம்ராஜ், சங்கர நயினார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கீழப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் தா.தேவ அன்பு நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!