17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பண்டிகை கால பொருட்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த தத்ரூப விலங்குகள்

பண்டிகை கால பொருட்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த தத்ரூப விலங்குகள்

எழுதியவர்: mohan January 2, 2024, 10:42 am

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி குழந்தைகள் உள்ளிட்டராமநாதபுரம் மக்களை கவரும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பொருட்காட்சி துவங்கியது. இராமநாதபுரம் கேணிக்கரை மகர் நோன்பு திடல் அருகே நல்லம்மாள் மைதானத்தில் ராம்நாடு எக்ஸ்போ லிங்க்ஸ் ன் டிஸ்னி லேண்ட் ஜுராசிக் பார்க் துவக்க விழா நடந்தது. ராட்சத கிங்காங் நுழைவு வாயிலுடன் கூடிய பொருட்காட்சியை ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினர் காயத்ரி திறந்து வைத்தார். இதில் நகர்மன்ற உறுப்பினர் செல்வராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராம்நாடு எக்ஸ்போ லிங்க்ஸ் உரிமையாளர் உதயகுமார் வரவேற்றார். தத்ரூபமாக இடம் பெற்றுள்ளசிங்கம், புலி, கரடி, யானை, மான்,காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, டைனோசர் உள்ளிட்ட வன விலங்களுடன் செல்பி எடுத்து செல்லும் விதமாக பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது . குழந்தைகளுக்கான விளையாட்டுகள், சிறார் முதல் பெரியோர் வரை விளையாடக்கூடிய ஜெயின்ட் வீல், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு வகை விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. வீடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கிட ஏராளமான கடைகள், நொறுக்கு தீனி, சிற்றுண்டி கடைகள், டிஸ்னிலேண்ட், ஜுராசிக் பார்க் உடன்தொடங்கப்பட்டுள்ளபொருட்காட்சியை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து செல்பி எடுத்து சென்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!