18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எழுமலை -மக்களுடன் முதல்வர் முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.,

எழுமலை -மக்களுடன் முதல்வர் முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.,

எழுதியவர்: mohan December 31, 2023, 1:43 pm

மக்களுடன் முதல்வர் முகாம் கடந்த 18ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.,இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சி தலைவர் ஜெயராமன் பேரையூர் வட்டாட்சியர் செல்லப்பாண்டி தலைமையில் செயல் அலுவலர் நீலமேகம் முன்னிலையில் பொதுமக்களிடம் இருந்து 13 துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் 462 எண்ணம் பெறப்பட்டது இம்மனுக்களில் சில மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது மீதமுள்ள மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் ஆலோசனைகள் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் முருகன் பிரபாகரன் ரமேஷ் பாண்டியன் சிவகுரு சேகர் பாண்டி பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக எழுமலை பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

உசிலை மோகன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!