18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் விபத்தில் இறந்த கபடி வீரருக்கு விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் 5லட்சத்திற்கான காசோலை

மதுரையில் விபத்தில் இறந்த கபடி வீரருக்கு விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் 5லட்சத்திற்கான காசோலை

எழுதியவர்: mohan December 31, 2023, 1:27 pm

மதுரை வண்டியூரை சேர்ந்த பாலமுருகன். பில்டிங்க் காண்டிராக்டர். இவருக்கு சரவணக்குமார் என்ற மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.இதில் சரவணக்குமார் விருதுநகர் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீர் முடித்து. இரண்டு வருடமாக வேலை பார்த்து வருகிறார்.சரவணக்குமார் 6ம் வகுப்பில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளவர். கடந்த சில வருடங்களாக மாநில அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி பல்வேறு பரிசுகளை குவித்துள்ளார்.கடந்த 9.10. 2023 ல் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு அகால மரணமடைந்தார்.அவருக்கு  வண்டியூரில் மவுன அஞ்சலி செலுத்த அவருடன் விளையாடிய விளையாட்டு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநிலத்தலைவர் சோலை ராஜா தலைமையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.பின்னர் இறந்த கபடி வீரருக்கு விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் 5லட்ச ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநிலத்தலைவர் சோலை ராஜா, வேலம்மாள் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி மணிவண்ணன், ராயல்சுந்தரம் இன்சூரன்ஸ் கிளை மேலாளர் பாலமுருகன் பொதுநல காப்பீட்டு அதிகாரி தாயுமானசுந்தரம் ஆகியோர் வீரரின் தந்தை தந்தை பாலமுருகனிடம் வழங்கினர்.தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!