17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.91,61,680 மதிப்பிலான 1 கிலோ 436 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.91,61,680 மதிப்பிலான 1 கிலோ 436 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

எழுதியவர்: mohan December 31, 2023, 12:00 pm

துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.அப்போது துபாய் பயணி ஒருவரிடம் 1 கிலோ 436 கிராம் தங்கம் இரண்டு பையில் கடத்தி வரப்பட்டதும், அதன் மதிப்பு 91,61,680 ரூபாய் என்பது தெரிய வந்தது.எனவே ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கடத்தி வந்த தங்கத்தை விமான நிலைய சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்து துபாய் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!