மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அரசாணை 33 உரிய திருத்தம் மேற்கொண்டு தொடர்ந்து கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஊர்தி பயணப்படி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளர்களுக்கும் சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் பொங்கல் போனஸ் ரூ.7000 வழங்க வேண்டும். ஓட்டுநர் பயிற்சி முடித்த கிராம உதவியாளர்களுக்கு ஓட்டுனராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள்.
எழுதியவர்: mohan December 29, 2023, 7:29 pm




You must be logged in to post a comment.