ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 8, 14, 15, 16, 17, 18 ஆகிய 6 வார்டுகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இன்று நடந்தது.இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகாமில்வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோருக்கு உடனடி விசாரணை அடிப்படையில் வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் பழனிக் குமார் வழங்கினார். நகராட்சி தலைவர் ஷெஹனாஸ் ஆபிதா, நகராட்சி ஆணையர் செல்வராஜ், துணைத்தலைவர் ஹமீது சுல்தான், கவுன்சிலர்கள் ஷேக் உசேன், நவாஸ் சப்ராஸ், முஹமது சுகைபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: வாரிசு சான்றிதழ் உடனடி விநியோகம்
எழுதியவர்: mohan December 29, 2023, 6:01 pm




You must be logged in to post a comment.