18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாடிப்பட்டி பேரூராட்சியில்மக்களுடன் முதல்வர் சிறப்புமுகாம்.

வாடிப்பட்டி பேரூராட்சியில்மக்களுடன் முதல்வர் சிறப்புமுகாம்.

எழுதியவர்: mohan December 29, 2023, 5:53 pm

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் கிருஷ்ணாமஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி தொடக்கிவைத்தார். பேரூராட்சிகளின் உதவிஇயக்குநர் சேதுராமன், தாசில்தார் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் வரவேற்றார். இந்த முகாமில் ஒன்றியகவுன்சிலர் பசும்பொன்மாறன், முன்னாள்பேரூராட்சிதலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சிதுணைத்தலைவர் கார்த்திக் மற்றும் பேரூராட்சிகவுன்சிலர்கள், பணியாளர்கள், வருவாய்ஆய்வாளர்கள், கிராமநிர்வாகஅலுவலர்கள் உள்ளிட்டபிறதுறைஅலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த முகாமில் பல்வேறுகோரிக்கை தொடர்பான மனுக்கள் அந்தந்ததுறைவாரியாக பெறப்பட்டது. முடிவில் செயல்அலுவலர் ஜெயலட்சுமி நன்றிகூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!