மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து நிலையூர் கம்பிக்குடி கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கம்பிக்குடி பாசன கால்வாயில் வடிவேல் கரை பகுதியில் உள்ள கால்வாய் மதகு உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வடிவேல்கரை ஊருக்குள் புகுந்தது.இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர்.இந்த நிலையில் வடிவேல்கரை கிராம மக்கள் கஷ்டங்களை குறித்து கீழை நியூஸ் செய்திகள் வெளியிடப்பட்டது.இது குறித்து மாவட்ட கவுன்சிலர் ஜெயகுமார் இடம் வடிவேல் கரை பொதுமக்கள் முறையிட்டனர் அதனைத் தொடர்ந்து இன்று மதியம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வடிவேல் கரை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் வீடுகள் சேதம் குறித்தும் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கீடு செய்து வருவாய் துறை அதிகாரிகள் வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என கூறினார்.மேலும் உடனே தண்ணீர் வெளியேறுவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும் என்றும் கால்வாய் உடைப்பை முற்றிலுமாக சரி செய்ய வேண்டும், என்றும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 200-க்கும் மேற்பட்ட வடிவேல்கரை கிராம மக்களுக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா நிதியுதவி வழங்கினார்.- தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தால் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்:
தென் மாவட்ட வெள்ள பாதிப்பு நிதிக்காக மத்திய அரசிடம் ஈபிஎஸ் அழுத்தம் கொடுப்பாரா என்ற கேள்விக்கு:எந்த தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை ஓரவஞ்சனையுடன் இதுவரை கேட்ட எந்த நிதியும் வழங்கப்பட்டதில்லை. கூட்டணியில் இருந்த போது நாங்கள் கொடுத்த எந்த மனுவையும் தற்போதைய மத்திய அரசு நிறைவேற்ற வில்லை. உரிமைகளை பெறுவதற்காக இபிஎஸ் கோரிக்கை மனுக்களை கொடுத்தார்.இபிஎஸ் இடம் இருந்து அதிமுகவை மீட்பது என்று ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு:ஓபிஎஸ் முடிந்து போன வரலாறு; எழுதப்பட்ட ஓவியம்; இபிஎஸ் குறித்த ரகசியங்களை வெளியிட்டால் என்று அவர் பேசுவது மிக மோசமான வார்த்தைகளை சில நாட்கள் முதல்வராக இருந்த ஓபிஎஸ் பயன்படுத்துவது அவருக்கே இழுக்கு.முதல்வர் மத்திய அரசு; ஒன்றிய அரசு என்று மாற்றி கூறுவது குறித்த கேள்விக்கு:மத்திய அரசு, ஒன்றிய அரசு என்று கூறுவது மட்டுமல்லாமல் ஒரு கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்திருப்பதை தவறு அதை அவர்கள் உடனடியாக மாற்ற வேண்டும்.கூட்டணி குறித்த கேள்விக்கு:பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு சிறுபான்மையினர் அதிகமாக கட்சியில் சேருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்




You must be logged in to post a comment.