18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் சிவன் ஆலயத்தில் திருவாதிரை விழா:

சோழவந்தான் சிவன் ஆலயத்தில் திருவாதிரை விழா:

எழுதியவர்: mohan December 27, 2023, 1:47 pm

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவன் ஆலயத்தில், திருவாதிரை விழா நடைபெற்றது. இவ்விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து, திருவம்பாவை பாராயணம், சிறப்பு பூஜைகள், பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், கோவில் செயல் அலுவலர் இளமதி, தொழில் அதிபர் எம். வி. எம் .மணி, கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், எம். வள்ளி மயில், கணக்கர் சி பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசருக்கு பால், தயிர் ,மஞ்சள் பொடி போன்ற அபிஷேக திரவியங்களால், அபிஷேகம் நடைபெற்றது.இதே போல, திருவேடகம் ஏடகநாசு சுவாமி ஆலயத்திலும், தென்கரை மூலநாத சுவாமி ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், பழைய சொக்கநாதர் கோவில், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேசர் திருக்கோவில் ஆகிய கோவில்களில், நடராஜர் ,சிவகாமி, மாணிக்கவாசகர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் ஆலய நிர்வாகிகள் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!