தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய் பாக்கெட்டிற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் பாக்கெட் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ராமநாதபுரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாவட்ட தலைவர் திரவிய பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் முன்னிலை வகித்தார். விவசாய அணி மாநில பொதுச்செயலர் பிரவீன் குமார், மாவட்ட பார்வையாளர் கோவிந்தன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் பேசினர். பொருளாளர் காளிராஜா, செயலாளர் ராஜேஸ்வரி, துணை தலைவர் பழனிக்குமார், மண்டல தலைவர்கள் கார்த்திகேயன், சண்முகநாதன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் எஸ்பி குமரன், அரசு தொடர்பு மாவட்ட நிர்வாகி முனியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கக்கோரிபாஜக விவசாய அணி ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan December 27, 2023, 1:23 pm




You must be logged in to post a comment.