18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியங்குடி நகர தமுமுக சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண உதவி..

புளியங்குடி நகர தமுமுக சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண உதவி..

எழுதியவர்: mohan December 25, 2023, 6:22 pm

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர தமுமுக சார்பில் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக புளியங்குடி நகர வியாபாரிகள், பொதுமக்கள், அனைத்து சமுதாய மக்களிடத்தில் வசூலிக்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் புளியங்குடியில் இருந்து தமுமுக மாவட்ட செயலாளர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.புளியங்குடி நகர தமுமுக தலைவர் செய்யது அலி பாதுஷா, தமுமுக நகர செயலாளர் அசன், மமக நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் MC, தமுமுக நகர பொருளாளர் முகைதின், தமுமுக நகர துணைத் தலைவர் அப்துல் காதர் MC, தமுமுக நகர துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, சமாதானிய சாகுல் ஹமீது, மட்டன் செய்யது, அப்துல் அஜீஸ், அனீஸ், உசேன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்கள். தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பஷீர் ஒலி Ex.MC, தமுமுக மாவட்ட பொருளாளர் பாசித், மாவட்ட தமுமுக துணை செயலாளர்கள் மசூது, அப்துல் மஜீத், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பீர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் பாதுஷா, கடையநல்லூர் நகரத் தலைவர் பஸ்ஸில் ஆகியோர் பாதிக்கப்பட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!