18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அண்டம்பள்ளம் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் தொடக்கம்

அண்டம்பள்ளம் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் தொடக்கம்

எழுதியவர்: mohan December 25, 2023, 1:57 pm

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் கணேசன் மூர்த்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் அவர்களின் ஆலோசனை படியும் நாட்டு நலப்பணி திட்டம் முகம் தொடங்கப்பட்டது இதில் அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் சமூகத்திலும் வாழும் ஊர் பகுதியிலும் பள்ளிக்கும் எந்த வகையில் எல்லாம் நன்மை பயக்கும் என்று விளக்கமாக கூறினார் மற்றும் இதில் பங்கு பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களின் மதிப்பையும் விளக்கினார் இதில் திட்ட அலுவலர் முதுகலை ஆசிரியர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பள்ளி கோவில் உழவாரப் பணியில் ஈடுபட்டு பொது சுகாதாரம் பேணுதல் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் முகாம் தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இறுதியாக முதுகலை தமிழ் ஆசிரியர் பார்த்திபன் நன்றியுரை கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!