17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது;

மதுரையில் தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது;

எழுதியவர்: mohan December 25, 2023, 11:55 am

மதுரை முத்துபட்டி பகுதியில் உள்ள கம்மாய்க்கரையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி (வயது 28) என்பவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட துப்பாக்கி (9MM Pistol), 35 டம்மி தோட்டாக்கள் மற்றும் 1,00,000 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை சுப்ரமணியபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.அதனைத் தொடர்ந்து வீரபாண்டியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்;மதுரை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த திவாகர் என்பவரிடம் துப்பாக்கியை வீரமணி பெற்றதாக தெரிவித்ததன் அடிப்படையில் திவாகரனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் திவாகரன் அளித்த தகவலின் படி திண்டுக்கல் பெரிய கடை வீதி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடமிருந்து திவாகரன் துப்பாக்கியை பெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து வீரபாண்டி மற்றும் திவாகர் இருவரையும் சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து துப்பாக்கி 9MM Pistol,35 டம்மி தோட்டாக்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.போலீசார் பதிவுகள் செய்த துப்பாக்கி 2016 ல் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!