17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பன் கடலில் நிறுத்தி வைத்த படகு தீப்பிடித்து எரிந்து நாசம்

பாம்பன் கடலில் நிறுத்தி வைத்த படகு தீப்பிடித்து எரிந்து நாசம்

எழுதியவர்: mohan December 25, 2023, 11:06 am

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்று தொழிலுக்கு சென்று திரும்பிய படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன..இதில் பாம்பன் பிரான்சிஸ் நகரைச் சேர்ந்த காலிங்ஸ் என்பவருக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீப்பற்றி எரிந்தமைக்கான காரணம் தெரியாத நிலையில், அப்போது அங்கு நின்ற மீனவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் படகு முற்றிலும் நாசமானது.இச்சம்பவம் மீனவர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!