17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்

எழுதியவர்: mohan December 23, 2023, 6:07 pm

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை, வாய்ஸ் ஆஃப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர்கள் இணைந்து டிச.23 சனிக்கிழமை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர். பிரேமலதா ஆலோசனையின் படி, தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் முருகன் சீரிய முயற்சியில் மாபெரும் இரத்ததான முகாம் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் வைத்து நடைபெற்றது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இம்முகாமில் வாய்ஸ் ஆஃப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை இரத்த நிலைய மருத்துவர் மரு. பாபு மற்றும் மருத்துவ குழுவினர் இரத்தம் சேகரித்தனர். உறைவிட மருத்துவர் செல்வபாலா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, திருப்பதி கலந்து சிறப்பித்தனர். முகாமில் குருதிக் கொடையாளர்கள் மற்றும் குருதி தான ஒருங்கிணைப்பாளர்கள் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிறப்பாக செயல்படும் மற்றும் ஒத்துழைப்பு நல்கும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தையும், ரத்த வங்கி குழுவினரையும், குருதிக் கொடையாளர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். ஜெஸ்லின் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்ய வந்த குருதிக் கொடையாளர்களையும், இந்த முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்கள் தென்காசி மருத்துவமனை இரத்த வங்கி குழுவினர் ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!