இராமநாதபுரம் மாணாக்கரின் கற்பனை, அறிவு தேடல்களுக்கு வடிகாலாக அனைத்து துறை சார்ந்த பொது கண்காட்சி 2023 அமிர்தா வித்யாலயம் சார்பில் ஆர் எஸ் மடையில் உள்ள அமிர்தா வித்யாலயம் சீனியர் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளியில் இன்று நடந்தது. பிரம்மச்சாரினி லட்சுமி ஒருங்கிணைப்பில் பள்ளி முதல்வர் ராமகிருஷ்ணன் வழிகாட்டல் படி, துணை முதல்வர் பாலவேல் முருகன் மேற்பார்வையில் நடந்தது. கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி துறைத் தலைவர் செல்வபெருமாள், கணினித் துறை பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மாணாக்கரின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புத்தாக்க திறனை அமிர்தா வித்யாலயம் குழும கல்வி ஒருங்கிணைப்பாளர் சிவப்பிரகாசம் பார்வையிட்டு மாணாக்கரை பாராட்டினார். இக்கண்காட்சியை ஏராளமான பெற்றோர் பார்வையிட்டு மாணாக்கரின் திறமையை பாராட்டினர்.
அமிர்தா வித்யாலயம் சார்பில் ராமநாதபுரத்தில் கண்காட்சி 2023
எழுதியவர்: mohan December 23, 2023, 5:38 pm




You must be logged in to post a comment.