மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே களத்து பொட்டல் குடியிருப்பு பகுதியில் வீட்டில் மலைப்பாம்பு புகுந்து இருப்பதாக பாம்பு பிடிக்கும் வீரர் சிவன் பாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிவன் பாண்டி வனத்துறையினர் உதவியுடன் அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 7 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்புகளை பார்த்தால் மக்கள் அடித்து துன்புறுத்த வேண்டாம் எனவும், தங்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக பாதுகாப்பாக மீட்கப்படும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே களத்து பொட்டல் பகுதியில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
எழுதியவர்: mohan December 22, 2023, 5:48 pm




You must be logged in to post a comment.