உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் தொடங்கி உள்ளது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்து பிறப்பு குடில் அமைத்தும், வீடுகளை நட்சத்திரம், வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மண்டபம் இந்திரா நகர், காந்தி நகர், மண்டபம் முகாம் முல்லை நகர், புளியம்பட்டி, வேதாளை சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு பொருட்கள் வழங்கி, பைபிள் வசனத்துடன் நேற்றிரவு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.புளியம்பட்டி வேர்டு ஆப் காட் போதகர் மனோஜ், தேவ சபை போதகர் தமிழ்ச்செல்வன், கிருபாசனம் ஜெபவீடு போதகர் அருள் ரெக்ஸன் துரை உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:கிறிஸ்துமஸ்தாத்தா வாழ்த்து செய்தி
எழுதியவர்: mohan December 22, 2023, 2:32 pm




You must be logged in to post a comment.