தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.,இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழுமலை பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பிஸ்கட், அரிசி, பருப்பு, சீனி, தண்ணீர் கேன்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் என நிவாரண பொருட்களை எழுமலை பேரூராட்சி அலுவலகத்திலிருந்து வாகனத்தில் ஏற்றி திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தனர்.,
தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எழுமலை பேரூராட்சி மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது
எழுதியவர்: mohan December 22, 2023, 11:00 am




You must be logged in to post a comment.